கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது மனைவியை பிரிந்தார்

கனடா பிரதமராக பதவி வகித்து வருபவர் ஜஸ்டின் ட்ரூடோ. இவரது மனைவி சோபி கிரிகோரி ட்ரூடோ. இவர்களுக்கு திருமணமாகி 18 ஆண்டுகள் ஆனது. இந்நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது மனைவி சோபி கிரிகோரியைப் பிரிவதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர்.

பல அர்த்தமுள்ள மற்றும் கடினமான உரையாடல்கள் மூலம் இம்முடிவை எடுத்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இவர்களுக்கு சேவியர் (15), எல்லா கிரேஸ் (14), ஹாட்ரியன் (9) என்ற 3 குழந்தைகள் உள்ளனர். அவர்கள் ஒரு நெருங்கிய குடும்பமாக இருக்கிறார்கள், சோபியும் பிரதம மந்திரியும் தங்கள் குழந்தைகளை பாதுகாப்பான, அன்பான மற்றும் கூட்டுச் சூழலில் வளர்ப்பதில் கவனம் செலுத்துகிறார்கள் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே டிரூடோவின் அப்பா பியர்ரி ட்ரூடோவும் தனது மனைவி மார்கரெட்டை 1979-ல் பிரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news