கனடா பிரதமர் கலந்துக்கொண்ட நிகழ்ச்சியில் காலிஷ்தான் ஆதரவு கோஷம் – இந்தியா கண்டனம்

கனடா நாட்டில் சீக்கியர் தினம் தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பங்கேற்றார். அப்போது, காலிஸ்தான் ஜிந்தாபாத் என்ற கோஷம் எழுப்பியதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், டெல்லியில் உள்ள இந்தியாவிற்கான கனடா துணை தூதரை அழைத்து வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரிவினைவாதம், பயங்கரவாதம் மற்றும் வன்முறைக்கு, கனடா மீண்டும் இடமளித்துள்ளதை இது மீண்டும் ஒருமுறை எடுத்துக்காட்டுகிறது. காலிஸ்தான் ஆதரவு முழக்கங்களை எழுப்பியது இரு நாடுகள் இடையிலான உறவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools