கனடா ஓபன் டென்னிஸ் – 3 வது சுற்றில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி
கனடா ஓபன் டென்னிஸ் தொடர் மாண்ட்ரியல் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் ஆகஸ்ட் 13-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 2-ம் நிலை வீராங்கனையான பெலாரசின் அரினா சபலென்கா, ரஷியாவின் சாம்சொனோவாவுடன் மோதினார்.
இதில் சாம்சொனோவா 7-6 (7-2), 4-6, 6-2 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்குள் நுழைந்தார். முன்னணி வீராங்கனையான சபலென்கா இதில் தோற்றதன் மூலம் தொடரில் இருந்து வெளியேறினார்.