கத்தாருக்கும் இந்தியாவுக்கும் வலுவான பொருளாதாரக் கூட்டணியாக உள்ளது – குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பேச்சு
குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு மூன்று நாடுகளுக்கான தமது பயணத்தின் கடைசிக் கட்டமாக கத்தார் சென்றுள்ளார். நேற்று கத்தார் பிரதமரும் உள்துறை அமைச்சருமான ஷேக் காலித் பின் அப்துல்அஜிஸ் அல் தானியுடன் வெங்கையா நாயுடு பேச்சு நடத்தினார். அப்போது பேசிய அவர், இந்தியாவில் கத்தாரின் முதலீடு மார்ச் 2020ல் இருந்து ஐந்து மடங்கு வளர்ச்சியடைந்துள்ளது என்று பாராட்டினார்.
கத்தாரில் சுகாதாரத் துறையில் இந்திய சுகாதார வல்லுநர்கள் ஆற்றிய பங்களிப்பை அவர் நினைவு கூர்ந்தார். இந்தியா அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்கு அதிக எண்ணிக்கையிலான மருந்துகளை வழங்குகிறது என்றும், பாரம்பரிய மருத்துவத் துறையில் கத்தாருடன் இணைந்து பணியாற்றுவதில் இந்தியாவும் மகிழ்ச்சி அடைவதாக அவர் குறிப்பிட்டார். இந்தியாவின் எரிவாயுத் தேவைகளில் 40 சதவீதத்தை கத்தார் பூர்த்தி செய்வதாக குறிப்பிட்ட அவர், எரிசக்தி பாதுகாப்பில் கத்தாரின் பங்கை இந்தியா ஆழமாக மதிக்கிறது என்றார்.
இதை தொடர்ந்து தோஹாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்தியா-கத்தார் ஸ்டார்ட்-அப் பாலத்தை தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், கத்தாருடன் இந்தியா மிகவும் வலுவான பொருளாதாரக் கூட்டணியை கொண்டுள்ளது, மேலும் அது வளமடைந்து வருகிறது என்றார்