கதாநாயகனாக நடிக்கும் கும் வித் கோமாளி புகழ்
‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் புகழ். இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவர் தற்போது பெரியத்திரையில் நடிக்க தொடங்கி இருக்கிறார்.
சந்தானத்துடன் சபாபதி, அருண் விஜய்யின் யானை, உள்ளிட்ட படங்களில் நடித்து உள்ளார். சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான வலிமை படத்திலும், சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும்
துணிந்தவன் படத்தில் நடித்திருந்தார்.
இவர் ஆரம்பத்தில் கிடைத்த வேலைகளை எல்லாம் செய்து சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டதாகவும், பின்பு தனியார் தொலைக்காட்சியில் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கடின
உழைப்பினால் முன்னேறியதாகவும் அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
சினிமாவில் சிறுசிறு கதாப்பாத்திரங்களில் தோன்றி அனைவரையும் கவர்ந்து வந்த புகழ், தற்போது கதாநாயகனாக களம் இறங்கியிருக்கிறார். மிஸ்டர் சூ கீப்பர் (Mr Zoo Keeper) என்று
பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் போஸ்டரை புகழ் அவருடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.