‘தென்மேற்குப் பருவகாற்று’ படத்தின் மூலமாக விஜய் சேதுபதியை ஹீரோவாகத் தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் சீனு ராமசாமி. தற்போது விஜய் சேதுபதியை வைத்து `மாமனிதன்’ என்ற படத்தையும் எடுத்து வருகிறார். யுவன்ஷங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைத்து தயாரிக்கவும் செய்கிறார்.
அதுமட்டு மல்லாமல், இந்தப் படத்தின் இசைக்காக யுவனுடன் இளையராஜா, கார்த்திக்ராஜா ஆகிய இருவரும் கைகோர்த்துள்ளனர். தேனியில் பரபரப்பாகப் படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் சீனு ராமசாமியின் ‘கண்ணே கலைமானே’ படத்தை விஜய் சேதுபதி பார்த்துள்ளார். உதயநிதி, தமன்னா நடித்திருக்கும் இந்தப் படம் மண்வாசனையுடன் எடுக்கப்பட்டிருக்கிறது.
படம் பார்த்து முடித்தவுடன் நெகிழ்ச்சியுடன் சீனு ராமசாமியைக் கட்டியணைத்து கண் கலங்கி இருக்கிறார் விஜய் சேதுபதி.