தென்னிந்திய சினிமாவின் நம்பர் ஒன் நடிகையான நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலிப்பது இந்திய சினிமாவே அறிந்த ஒன்று தான் என்றாலும், அவர்களுக்கு எப்போது திருமணம் நடக்கும் என்பதை, அந்த கடவுள் கூட அறிந்திருக்க மாட்டார். அந்த அளவுக்கு திருமண விஷயத்தில் சீக்ரெட் வைத்திருக்கும் அந்த ஜோடி, ஏற்கனவே திருமணம் செய்துக் கொண்டு கணவன் – மனைவியாக வாழ்ந்து வருவதாகவும் கோடம்பாக்கத்தில் பேச்சு அடிபடுகிறது.
இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரபல தனியார் மருத்துவமனை ஒன்றில் நயன்தாரா, கண் கலங்கியபடி சில நாட்கள் தங்கினார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இதற்கு காரணமே அவரது காதலர் விக்னேஷ் சிவன் தானம்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட விக்னேஷ் சிவன், தனியார் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டாராம். அவருடன் மருத்துவமனையிலேயே தங்கிய நயன்தாரா, அவருக்கான அத்தனை விஷயங்களையும் பார்த்து செய்ததோடு, அவரது கையை பற்றியபடி, அவருடனே கண்கலங்கியபடி அமர்ந்திருந்தாராம். இதைப் பார்த்த அந்த மருத்துவமனை மருத்துவர்களும், செவிலியர்களும் கூட கண்கலங்கிவிட்டதாக கூறப்படுகிறது.