‘கண்டதை படிக்காதே’ பட போஸ்டரை வெளியிட்ட ‘கொலைகாரன்’ படக்குழு

புல்லி மூவிஸ் வழங்க சத்யராம் தயாரிக்கும் படம் ‘கண்டதை படிக்காதே’. இப்படத்தின் போஸ்ட்டரை கொலைகாரன் படத்தின் வெற்றிவிழாவில் நடிகர்கள் விஜய் ஆண்டனி, அர்ஜூன் மற்றும் கொலைகாரன் படத்தின் இசையமைப்பாளர் சைமன் கிங் ஆகியோர் வெளியிட்டனர்.

கண்டதை படிக்காதே படத்தின் இயக்குனர் ஜோதிமுருகன் கூறுகையில், ‘இது ஒரு ஹை கான்செப்ட் ஸ்டோரி லைனை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம். பிளாக்பஸ்டர் ஹிட் ஆகும் திரைக்கதை அமைப்பை கொண்ட படங்களை ஹாலிவுட்டில் ஹை கான்செப்ட் திரைப்படம் என்று அழைப்பார்கள். இந்த மாதிரியான படங்களில் எந்த நடிகர் நடித்தாலும் படத்தின் கதை அம்சமே படத்தை சூப்பர் டூப்பர் ஹிட்டாக்கிவிடும். அதே மாதிரி இந்த படமும் ஹாரர், மர்டர், மிஸ்டரி, மற்றும் ஆக்‌ஷன் கலந்த ஜனரஞ்சமான திரைப்படமாக இருக்கும். படம் ஆரம்பித்து மூன்று நிமிடங்களுக்குள் ரசிகர்களின் கவனத்தை படம் கவர்ந்துவிடும். படத்தின் இறுதிக் காட்சி வரையிலும் கொலைகாரன் படத்தை போலவே சஸ்பென்ஸ் இருந்துக்கொண்டேயிருக்கும். ஒவ்வொரு காட்சியிலும் அடுத்து அடுத்து என்ன நடக்கும் என்கிற எதிர்பார்ப்பை தூண்டுகின்ற வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது என்று இயக்குனர் கூறினார்.

இப்படத்தில் ஆதித்யா ஹீரோவாக நடித்திருக்கிறார். திருப்பாச்சி புகழ் பான்பராக் ரவி ஆர்யான் வில்லனாக நடித்திருக்கிறார், சபிதா ஆனந்த், படத்தின் தயாரிப்பாளர் சத்யராமும் நடித்துள்ளார் மற்றும் பிரீத்தி, சுஜி, வைஷாலி, ஜென்னி, என நான்கு ஹீரோயின்கள் இதில் நடித்திருக்கிறார்கள்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools