கணித மேதை ராமானுஜன் கெளரவிப்பு! – அமெரிக்க பல்கலைக்கழகத்திற்கு ரூ.7 கோடி வழங்கிய இந்திய தம்பதி

காலத்தை வென்ற கணித மேதை என போற்றப்படுபவர் ஸ்ரீனிவாச ராமானுஜன். தமிழரான இவரது புகழ் உலகமெங்கும் ஓங்கி ஒலிக்கிறது.

இந்த நிலையில், ராமானுஜத்தை கவுரவிக்கும் விதமாக அமெரிக்க பல்கலைக்கழகத்தில் அவரது பெயரில் கவுரவ பேராசிரியரை நியமிக்க இந்திய வம்சாவளி தம்பதி 1 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.7 கோடி) நன்கொடையாக வழங்கி உள்ளது.

ஓய்வுபெற்ற கணித பேராசிரியரான வரதன் அவரது மனைவி வேதா ஆகிய இருவரும் இணைந்து இந்த தொகையை கலிபோர்னியா பல்கலைக்கழகத்துக்கு வழங்கினர். அதனைத் தொடர்ந்து ராமானுஜன் பெயரில் கவுரவ பேராசிரியரை நியமிக்க பல்கலைக்கழக நிர்வாகம் ஒப்புதல் அளித்தது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools