X

கணவரின் ரகசியத்தை வெளியிட்ட நடிகை காஜல் அகர்வால்

காஜல் அகர்வாலும், தொழில் அதிபர் கவுதம் கிட்ச்லுவும் கடந்த மாதம் 30ம் தேதி திருமணம் செய்து கொண்டார்கள். தேனிலவுக்கு மாலத்தீவுகளுக்கு சென்றார்கள். தன்னுடைய காதல் பற்றி முதல்முறையாக காஜல் அகர்வால் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது,

லன்ச்சுக்கு சென்றது தான் எங்களின் முதல் டேட். அங்கு அவர் கிட்டத்தட்ட என்னை பேட்டி எடுத்தார் எனலாம். ஆனால் அதுவும் ஜாலியாக இருந்தது. என்னிடம் ப்ரொபோஸ் செய்வதற்கு முன்பு என் தந்தையிடம் பேசி அனுமதி வாங்கியிருக்கிறார் கவுதம். அவர் கண்டிப்பாக ப்ரொபோஸ் செய்வார் என்று தெரியும். அதனால் அவர் ப்ரொபோஸ் செய்தபோது ஆச்சரியமாக இல்லை. என் தந்தையிடம் முன்பே பேசினாலும் ப்ரொபோஸ் செய்யாவிட்டால் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்றேன்.

நானாக பிடித்து அவரை உட்கார வைத்து பார்க்க வைத்தால் தான் படம் பார்ப்பார். இல்லை என்றால் கவுதமுக்கு படம் பார்க்கும் பழக்கம் இல்லை. எங்கள் இருவரில் கவுதம் தான் ரொமான்டிக். கவுதமுக்கு அவரின் செல்போன் மீது காதல். தற்போது புது போன் வேறு கிடைத்திருக்கிறது. அந்த காதலை கைவிட்டால் நன்றாக இருக்கும்.

எங்களுக்கு இடையே சண்டை வந்தால் கவுதம் தான் முதலில் விட்டுக் கொடுப்பார். கொரோனா வைரஸ் பிரச்சனைக்கு இடையே திருமண ஏற்பாடுகள் செய்தது கடினமாக இருந்தது. திருமணத்திற்கு வந்த வேலையாட்கள், விருந்தாளிகள் என்று அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. திருமணம் நடந்த இடம் சானிடைஸ் செய்யப்பட்டது.

திருமணம் முடிந்த கையோடு புது வீட்டில் குடியேறியது வித்தியாசமான அனுபவம். இப்படி தனி வீட்டில் வசிப்பது புது அனுபவம். வீட்டையும் பார்த்துக் கொண்டு, வேலைக்கும் செல்லும் பெண்கள் மீது எனக்கு எப்பொழுதுமே தனி மரியாதை உண்டு. தற்போது அந்த மரியாதை மேலும் அதிகரித்துள்ளது. கவுதம் என் மீது அதிக அக்கறை வைத்துள்ளார். அவர் சரியான நேரத்திற்கு சாப்பிட்டாரா, தூங்கினாரா என்பதை நான் பார்த்துக் கொள்கிறேன். நான் எங்காவது சென்றால் பத்திரமாக சென்றேனா, என் நாள் நல்லபடியாக இருந்ததா என்று கவுதம் கேட்பார். திருமணத்திற்கு முன்பு இப்படி எல்லாம் இல்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.