கணவரால் யோகா கற்றுக்கொண்ட சமந்தா
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக கலக்கி வருபவர் சமந்தா. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் ரசிகர்களை கவர்ந்து அசத்தி வருகிறார். இவர் தமிழில் அடுத்து விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகியோருடன் இணைந்து காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இத்திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார்.
இந்நிலையில் நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போட்டோவை வெளியிட்டுள்ளார். கைகளை தரையில் ஊன்றி, அந்தரத்தில் பறந்தவாறு அவர் செய்யும் யோகா புகைப்படத்தை பகிர்ந்துள்ள சமந்தா, ”கார்டனிங்கிற்கு பிறகு நான் என்ஜாய் செய்யும் இன்னொரு விஷயம் இந்த யோகா. இதற்கு காரணம் என் கணவர்தான். நானும் அவரும் சேர்ந்துதான் இப்படி யோகா செய்து வருகிறோம்” என பதிவிட்டுள்ளார். சமந்தாவின் இந்த புகைப்படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.