கட்னாவில் பேருந்து மீது லாரி மோதி விபத்து – 15 முதியவர்கள் பலி

கனடாவில் உள்ள மனிடோபா மாகாணத்தில் முதியவர்களை அழைத்துக் கொண்டு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. கார்பெரி பகுதியில் வந்தபோது எதிர்பாராத விதமாக பஸ் மீது டிரெய்லர் டிரக் வேகமாக மோதியது. இந்த விபத்தில் 15 பேர் பலியாகினர். 10 பேர் காயமடைந்தனர் என போலீசார் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக, போலீசார் கூறுகையில், பஸ்ஸில் 25 பேர் பயணித்தனர். 10 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்றனர். விபத்து குறித்து தகவலறிந்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, விபத்தில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்தார்.

மனிடோபாவில் இருந்து வரும் செய்தி நம்பமுடியாத துயரமானது என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும், அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் அனுபவிக்கும் வலியை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news