கட்டிடங்களில் குறியீடு வரைந்து தாக்கும் ரஷ்யா – புகைப்படத்தால் பரபரப்பு

உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 6-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று முதல் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இன்று ரஷியா ராக்கெட் வெடிகுண்டு மூலம் தாக்குதல் நடத்தி வருவதாக உக்ரைன் அதிபர் வெலன்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.

கெர்சன், கார்கீவ், தலைநகர் கீவ் ஆகியவற்றின் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதலை அதிகரித்துள்ளது. உக்ரைனை நோக்கி 64 கி.மீட்டர் தூரத்திற்கு ரஷிய ராணுவ வாகனம் அணிவகுத்து நிற்கிறது. இதனால் ரஷியா மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்தும் என அஞ்சப்படுகிறது.

இந்த நிலையில் கீவ் போன்ற நகரங்களில் உள்ள அடுக்குமாடி கட்டிடங்களில் ‘X’ குறியீடு இடப்பட்டுள்ளது. இந்த குறியீடு ரஷிய ராணுவத்தினரால் குறிக்கப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த குறியீடு உள்ள இடங்களை குறிவைத்து ரஷியா தாக்குதல் நடத்துவதற்காக இப்படி செய்திருக்கலாம் என அதிகாரிகள் எச்சரிக்கலாம். மேலும், குறியீடு இடப்பட்ட கட்டிடங்களுக்கு கீழ் கியாஸ் பைப் லைன் செல்வதால், இதனை குறிவைத்து தாக்குவதற்காக கூட குறியீட்டிருக்கலாம்.

இதனால், பொதுமக்கள் இதுபோன்ற குறியீட்டுகளை பார்த்தால் உடனடியாக அழித்துவிட வேண்டும். அல்லது மறைத்து விட வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். கீவ் நகரின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளங்களில் இந்த தகவலை குறியிட்டுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools