கட்சியை அழிக்க இனியும் விடமாட்டேன் – தொண்டர்களிடம் பேசிய சசிகலா

சசிகலா தினமும் தொண்டர்களுடன் தொலைபேசியில் உரையாடி வருகிறார். அந்த வகையில் திருப்பூர் முன்னாள் மேயர் விசாலாட்சி, திண்டுக்கல்லை சேர்ந்த வெற்றி, சோளிங்கரை சேர்ந்த உதயகுமார், கோவையை சேர்ந்த ஷேக் முகமது, புதுக்கோட்டையை சேர்ந்த அமுதா ஆகியோரிடம் சசிகலா பேசியுள்ளார்.

‘‘எல்லாரும் பதவிக்கு ஆசைப்படுவாங்க. ஆனா பதவிக்கு நான் ஆசைப்பட்டதே கிடையாது. இது எல்லாருக்குமே தெரியும். எல்லாமே நல்லபடியா நடக்கும். கட்டாயம் வந்துருவேன். கட்சியை அழிக்க இனியும் விடமாட்டேன். நிர்வாகிகளை விட எனக்கு தொண்டர்கள்தான் முக்கியம். தொண்டர்களை நான் கைவிடவே மாட்டேன்.

என்னை பற்றி பழைய ஆட்களுக்கு நல்லாவே தெரியும். சென்னையில் பல இடங்களில் கொடி கம்பமும், கல்வெட்டும் இருக்கு, ஆனா கம்பத்தில்  அ.தி.மு.க.  கொடி இல்லைனு தொண்டர்கள் சொல்றாங்க. இதையெல்லாமே அவங்க கவனிக்கிறதே இல்லை. கட்சியை சரியா கவனிக்கிறதே இல்லைனு தான் தொண்டர்கள் என்கிட்ட சொல்லிக்கிட்டு இருக்காங்க. இதையெல்லாம் செய்யுறதுக்கு அவங்களுக்கு நேரமே இல்லைனு நினைக்கிறேன்.

நாம வந்துதான் எல்லாத்தையும் சரி பண்ணி ஆகணும். பெண்கள் நினைச்சா, எல்லாத்தையுமே திறம்பட செஞ்சுடுவோம். எல்லாத்தையுமே மாத்தி காட்டுவோம்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools