Tamilவிளையாட்டு

கடைசி நாள் ஆட்டம் நடக்காமல் போனது வருத்தமளிக்கிறது – விராட் கோலி

இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதிய முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் நடந்தது.

நேற்றைய 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது. இதனால் போட்டி டிரா ஆனது. மழையால் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு பறிபோனதாக கருதப்படுகிறது.

இந்தியாவின் வெற்றிக்கு மேலும் 157 ரன் தேவை, கைவசம் 9 விக்கெட் என்ற நிலையில் கடைசி நாள் ஆட்டம் கைவிடப்பட்டது. இந்த போட்டி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டதாகும். இதனால் இரு அணிகளுக்கும் தலா 4 புள்ளிகள் வழங்கப்பட்டது.

கடைசி நாள் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறும்போது, “கடைசி நாளில் போட்டி நடந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். நடக்காமல் போனது வருத்தம் அளிக்கிறது. இந்த டெஸ்டில் எங்களுக்கு வெற்றி வாய்ப்பு இருந்ததை அறிவோம். நிச்சயம் எங்கள் கைதான் ஓங்கி இருந்தது” என்றார்.