காஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் சென்று வருகிறார்கள். கடைசி நாளான நேற்றுஅத்திவரதரை காண்பதற்காக அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்களும் பலரும் சென்று வருகிறார்கள்.
நேற்று முன்தினம் நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவி லதாவுடன் சென்று வழிபட்டார். நேற்று நள்ளிரவில் நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவன் மற்றும் குடும்பத்தினருடன் சென்று அத்திவரதரை வழிப்பட்டார். இந்நிலையில், இன்று காலை இயக்குனர் அட்லீ தனது மனைவி பிரியாவுடன் சென்று சாமி தரிசனம் செய்திருக்கிறார்.
அட்லீ இயக்கத்தில் தற்போது ‘பிகில்’ திரைப்படம் உருவாகியுள்ளது. விஜய் கதாநாயகனாக நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்புகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. தீபாவளி தினத்தில் இப்படம் வெளியாக இருக்கிறது.