கடவுள் வழிபாட்டை திணிக்கக் கூடாது – கனிமொழி எம்.பி பேச்சு

சென்னை மயிலாப்பூர் கவிக்கோ அரங்கில் ‘இறுதி நாயகர்கள்’ புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

தமிழ்நாட்டில் தமிழர்கள் அதிகமாக நம்பிக்கை வைத்து திருச்செந்தூர் கோவிலுக்கு செல்கிறார்கள். லட்சக்கணக்கானவர்கள் முருகன்தான் நம்முடைய தெய்வம் என்று வந்து கொண்டிருக்கிறார்கள். வழிபாடு என்பது ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட ஒரு விஷயம். நீங்கள் வழிபாடுகளை மதத்தை, கடவுளை ஏற்றுக் கொள்கிறீர்களா? என்பது வேறு ஒரு விசயம்.

ஆனால் அதைத் தாண்டி அந்த கடவுள் யார்? அந்த கடவுள் உருவம் எது? என்பதை ஒவ்வொருவரும் முடிவு செய்ய வேண்டும். அது தனிப்பட்ட ஒரு விசயம். அந்த உரிமை எல்லோருக்கும் இருக்கிறது. கடவுள் வழிபாட்டை திணிக்கக் கூடாது.

மத்திய அரசின் ஒவ்வொரு திட்டமும் பெயரளவில் மட்டும்தான் உள்ளது. மக்களின் வாழ்வை அந்த திட்டங்கள் என்றும் மாற்றாது. மக்களுக்கு போய் சேரக் கூடிய எல்லா திட்டங்களையும் இன்று அழித்து விட்டு வேறு ஒரு விசயத்தை மக்களுடைய வாழ்க்கைக்கு சம்பந்தம் இல்லாமல் மக்களுடைய வாழ்க்கையை எந்தவிதத்திலும் மாற்ற முடியாத சில விசயங்களை எடுத்து வைத்துக் கொண்டு அதை இந்த தேசமாக தேசியமாக மக்களின் அடையாளமாக மாற்ற நினைத்து கொண்டிருக்க கூடியவர்களை நாம் மாற்ற முடியும். அவர்களுடைய இடத்தை வேறு ஒன்றாக மாற்ற முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news