கடவுள் ஆசிர்வதித்தால் நான் தேர்தலில் போட்டியிடுவேன் – நடிகை கங்கனா ரணாவத்

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகை கங்கனா ரனாவத். இவர் ஜெயம் ரவி நடித்த தாம் தூம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இதன்பிறகு, தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாக்கப்பட்ட தலைவி படத்தில் நடித்திருந்தார்.

இவர், இயக்குனர் பி. வாசு இயக்கிய சந்திரமுகி 2 படத்தில் நடித்திருந்தார். இதன்பிறகு, இந்தியில் உருவான தேஜஸ் படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் துவாரகா கோவிலுக்கு சென்றிருந்தார். கோயிலில் சாமி தரிசனம் செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த கங்கனா அவர்களின் கேள்விக்கு பதில் அளித்தார்.

அதன்படி, பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த கங்கனா ரனாவத், “கடவுள் கிருஷ்ணர் ஆசிர்வதித்தால், நான் போட்டியிடுவேன். பா.ஜ.க. அரசின் முற்சிகளால், இந்தியர்களாகிய நாம் 600 ஆண்டு கால போராட்டத்தின் வெற்றியை பார்க்க போகிறோம். உலகம் முழுக்க சனாதன தர்மத்தின் கொடியை பறக்க செய்ய வேண்டும்,” என்று தெரிவித்தார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil cinema