தமிழகத்தின் புகழ்பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றாக கன்னியாகுமரி கடல்பகுதி விளங்குகிறது. இங்கு தினமும் பல நாடுகள், இந்தியாவின் மற்ற மாநிலம் மற்றும் மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரி வந்து செல்கின்றனர்.
அந்த வகையில், கன்னியாகுமரி வரும் சுற்றுலா பயணிகள் கடலில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம் செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். அங்கு தியானம் செய்யும் இடம் மற்றும் திருவள்ளுவர் சிலை உள்ளிட்டவைகளையும் கண்டுகளிக்கின்றனர்.
இந்த நிலையில், கன்னியாகுமரி கடலில் ஏற்பட்டுள்ள நீர்மட்டம் தாழ்வின் காரணமாக விவேகானந்தர் மண்டபத்திற்கான சுற்றுலா படகு சேவை இன்று தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. கடலின் நீர்மட்ட தன்மையைப் பொறுத்து காலை 11.30 மணியளவில் படகு போக்குவரத்து சேவை தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இதுகுறித்த அரிவிப்பு பின்னர் வெளியாகும் என்று தெரிகிறது.