கடலூர் அருகே தடுப்பூசி போட்டதால் மூன்று மாத குழந்தை இறப்பு?

கடலூர் மாவட்டம் அழகியநத்தம் பகுதியை சேர்ந்த 3 மாத ஆண் குழந்தைக்கு, கலையூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்டது. நள்ளிரவில் குழந்தைக்கு வயிறு உப்பியதாக கூறி, கடலூர் அரசு மருத்துவமனையில் பெற்றோர் அனுமதித்தனர்.

குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே குழந்தை உயிரிழந்துவிட்டதாக கூறியதால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் தடுப்பூசி செலுத்தியதால் தான் குழந்தை உயிரிழந்ததாக பெற்றோர் குற்றச்சாட்டி உள்ளனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news