X

கடலூரில் நடைபெறும் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ படப்பிடிப்பு

நடிகர் ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் மற்றும் வசந்த் ரவி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்நிலையில், ‘ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பு கடலூர் மாவட்டம் அழகிய நத்தம் பகுதியில் நடைபெற்று வருகிறது. தென்பெண்ணை ஆற்றின் பாலத்தில் நடைபெறும் இந்த படப்பிடிப்பில் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

இந்த பகுதியில் பொது மக்கள் யாரும் அனுமதியில்லை என்பதால் படப்பிடிப்பு நடக்கும் பகுதியில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவிலேயே பொதுமக்கள் நிறுத்தி வைக்கப்படுகின்றனர். மேலும், இதில் நடிகர் ரஜினி மற்றும் முக்கிய கதாபாத்திரங்கள் பங்கேற்றுள்ளதால் போலீசாரின் உரிய பாதுகாப்புடன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.