கச்சத்தீவு அருகே ராமேஸ்வர மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மோதியதில் விபத்து ஏற்பட்டது.
இதையடுத்து மீனவர்களின் படகு கவிழ்ந்ததில் 7 மீனவர்கள் கடலில் விழுந்து தத்தளித்தனர். அப்போது வேறு படகிலிருந்த சக மீனவர்கள் அவர்களை மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர்.
கச்சத்தீவு அருகே எல்லை தாண்டியதால் இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மீனவர்களின் படகு மீது மோதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.