Tamilசினிமா

கங்குவா படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ இன்று வெளியாகிறது

நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சிவா இயக்கத்தில் “கங்குவா” படத்தில் நடித்து வருகிறார். ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. ‘கங்குவா’ திரைப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டரை சமீபத்தில் படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது.

இந்நிலையில், “கங்குவா” படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ இன்று காலை 11 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், தி கிங் அரைவ்ஸ் (The king Arrives) என்று குறிப்பிட்டுள்ளது. இதனை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.