X

கங்குலியின் உடல் நிலை சீராக உள்ளது – மருத்துவமனை அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் வாரிய தலைவரும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலிக்கு கடந்த 2-ந்தேதி திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக கொல்கத்தாவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு இதயத்துக்கு செல்லும் ரத்தக்குழாயில் 3 அடைப்பு இருப்பது தெரியவந்தது. ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சையின் மூலம் ஒரு அடைப்பு அகற்றப்பட்டது.

5 நாள் சிகிச்சைக்கு பிறகு அவர் வீடு திரும்பினார். இந்த நிலையில் கங்குலியை நேற்று மீண்டும் அவசரமாக ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றதால் பரபரப்பு உண்டானது. அவருக்கு மறுபடியும் லேசான நெஞ்சு வலி ஏற்பட்டதாக தகவல்கள் பரவின. ஆனால் அவர் தனது இதயம் செயல்பாடு தொடர்பாக பரிசோதித்துக் கொள்ள வந்ததாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் ஆஸ்பத்திரி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது