கங்கனா ரணாவத்தை கலாய்த்த ரசிகர்கள்!

கங்கனா ரணாவத் நடிப்பில் வெளியான ‘மணிகர்னிகா’ படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. ஜான்சி ராணி லட்சுமிபாய் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படத்தை எடுத்து இருந்தனர். படத்தின் வசூல் ரூ.100 கோடியை தாண்டி உள்ளது. இந்த படத்தில் வாள் சண்டை, குதிரையேற்ற பயிற்சிகள் எடுத்து கஷ்டப்பட்டு நடித்ததாக கங்கனா ரணாவத் தெரிவித்து இருந்தார்.

யுத்த களத்தில் குதிரையில் சென்று டூப் போடாமல் அவர் சண்டை போட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் இப்போது படப்பிடிப்பு தளத்தில் கங்கனா ரணாவத் சண்டை காட்சிகளின் போது எடுத்த ‘மேக்கிங் வீடியோ’ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில் மரத்தில் செய்யப்பட்ட குதிரை பொம்மையில் கங்கனா ரணாவத் வாளுடன் உட்கார்ந்து இருக்கிறார்.

அந்த குதிரையை இருந்த இடத்திலேயே ஓடுவது போன்று மோட்டார் மூலம் இயக்குகிறார்கள். இந்த வீடியோவை பார்த்து பொம்மை குதிரையில் உட்கார்ந்து சண்டை போடுவதுதான் உங்கள் வீரமா? இதற்குத்தான் கஷ்டப்பட்டேன் என்றீர்களா? என்றெல்லாம் பலரும் கேலி செய்து கலாய்த்து வருகிறார்கள்.

இதற்கு ட்விட்டரில் பதிலடி கொடுத்துள்ள கங்கனாவின் சகோதரி ரங்கோலி, “வேறு எப்படி குளோஸ் அப் காட்சியை படமாக்க முடியும்? இதன் பெயர் எந்திர குதிரை. கிளாடியேட்டர், தி லாஸ்ட் சாமுராய், பிரேவ் ஹார்ட் உள்ளிட்ட படங்களில் பயன்படுத்தி உள்ளனர். இந்த தொழில்நுட்பத்தை பார்க்கும்போது முட்டாள்கள் ஆச்சரியப்படுவார்கள்” என்று கூறியுள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools