ஓ.பன்னீர் செல்வம் வீட்டில் நடந்த கோமாதா பூஜை
அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சாதகமான தீர்ப்பு வந்ததால் அவர் மகிழ்ச்சி அடைந்தார். இதையடுத்து அவருடைய ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.
இன்று காலை ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் கோமாதா பூஜை நடந்தது. மருந்தீஸ்வரர் கோவில் அர்ச்சகர் தலைமையில் நடந்த இந்த கோமாதா பூஜையில் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்றார். அவர் மஞ்சள் வேட்டி-வெள்ளை சட்டை அணிந்து கலந்து கொண்டார்.
பின்னர் தனக்கு ஆதரவாக உள்ள 6 மாவட்ட செயலாளர்களுடன் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் இடத்துக்கு புறப்பட்டு சென்றார்.