ஓ.பன்னீர் செல்வத்துடன் இணைந்து அதிமுகவை மீட்போம் – டிடிவி தினகரன் பேட்டி

மதுரை மாவட்டம் மேலூர் அருகே தெற்குதெரு கிராமத்தில் அ.ம.மு.க. கட்சி சார்பில் அக்கட்சியின் கொடியேற்று விழா நடந்தது. இதில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்து கொண்டு அ.ம.மு.க. கொடியேற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

கொடநாடு கொள்ளை வழக்கில் அ.ம.மு.க. ஆட்சி அமைந்ததும் நிச்சயம் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர். தற்போது ஓ/பன்னீர்செல்வமும் நம்மோடு இணைந்துள்ளார். நாங்கள் இருவரும் இணைந்து அம்மாவின் இயக்கத்தை மீட்டெடுப்போம். 4 ஆண்டுகளாக பதவி வகித்த பழனிச்சாமி ஆட்சிக்கு எதிராக மக்கள் கோபபட்டு தி.மு.க. திருந்தி இருக்கும் என வாக்களித்தார்கள். ஆனால் நாங்கள் திருந்தவே மாட்டோம், எங்களுக்கு எதற்கு ஆட்சி பொறுப்பை கொடுத்தீர்கள் என மக்களை வாட்டி வதைத்து தண்டிக்கும் அரசாக தி.மு.க. உள்ளது.

ஒரு குடும்பத்திடம் மட்டுமே ரூ. 30 ஆயிரம் கோடிக்கு மேல் சொத்து வைத்திருப்பதாக மதுரையை சேர்ந்த அமைச்சர் தெரிவித்திருக்கிறார். அதனால் தான் அவரது துறை மாற்றப்பட்டிருக்கிறது.

இவ்வாறு டி.டி.வி. தினகரன் பேசினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools