X

ஓ.பன்னீர் செல்வத்திடம் வந்த கடிதத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் – சபாநாயகர் அப்பாவு

தமிழக சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களிடம் பேசியதாவது:

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து எந்த கடிதமும் வரவில்லை. ஓ.பன்னீர்செல்வத்திடம் இருந்து அவரது உதவியாளர் மூலம் ஒரு கடிதம் வந்துள்ளது.

அந்த கடிதத்தில் எதிர்க்கட்சி துணைத் தலைவராக வேறு யாரையாவது நியமித்தால் ஏற்கக்கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கடிதத்தின் மீது விருப்பு வெறுப்பின்றி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எந்த முடிவு எடுத்தாலும் அதை தெரிவிப்பேன். மற்றபடி அ.தி.மு.க.வில் நடக்கும் கட்சி விசயங்கள் பற்றி பத்திரிகைகளில் தான் பார்த்தேன். அது அவர்கள் கட்சி விசயம். அதுபற்றி நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை.

தேர்தல் ஆணையம் சென்றுள்ளனர். அங்கு என்ன முடிவு எடுக்கப்படுகிறது என்பதை பார்க்க வேண்டும். எனவே எல்லாமே பரிசீலனையில்தான் உள்ளது. இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. நீங்களாக யூகித்து கொண்டு பதிலை எதிர்பார்த்தால் அதுபற்றி கருத்து கூற முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.