ஓலா, உபேர் டிரைவர்கள் நேற்று முதல் 3 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர். வாடகை வாகனங்களை முறைப்படுத்த வேண்டும், பைக் டாக்சியை தடை செய்ய வேண்டும், மீட்டர் கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஆட்டோ, கார்களை ஓட்டாமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இரண்டாவது நாளாக ஓலா, உபேர் டிரைவர்கள் போராட்டம் இன்றும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஓலா, ஊபர் டிரைவர்கள் போராட்டத்தின் எதிரொலியாக சேவைக் கட்டணம் அதிரடியாக உயர்ந்துள்ளது. குறைந்தது 50 ரூபாய் முதல் அதிகபட்சமாக 120 ரூபாய் வரை கட்டணம் உயர்ந்துள்ளதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குறைந்தபட்ச ஓட்டுநர்களே டாக்சி சேவை அளித்து வரும் நிலையில் கட்டணம் உயர்ந்துள்ளது.