ஓராண்டை நிறைவு செய்த மக்கள் நீதி மய்யம்! – அலுவலகத்தில் கமல் கொடி ஏற்றினார்

நடிகர் கமல் ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கி இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. இதையொட்டி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் இன்று கொடியேற்றினார். பின்னர் அங்கு திரண்டிருந்த தொண்டர்களிடையே உரையாற்றினார்.

அப்போது, தமிழகம் முழுவதும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் கொடி ஏறிக்கொண்டிருப்பதாகவும், மக்கள் பலம் இருப்பதால் தேர்தலில் நாம் தனியே நிற்போம் என அறிவித்ததாகவும் கூறினார்.

“தமிழகமெங்கும் என்னும் மக்கள் நீதி மய்யம் என்னும் குடும்பம் பரவி உள்ளது. நியாயமான பிரசங்கங்களின் கணக்கு வழக்குகளுடன் மேலும் வலிமை பெறும். நாம் செய்யவேண்டிய வேலைகள் நிறைய இருக்கின்றன, குறுகிய நாட்களே உள்ளன” என்றும் கமல் பேசினார்.

கட்சியின் முதலாமாண்டு நிறைவையொட்டி இன்று பிற்பகல் நாகை மாவட்டம் செல்லும் கமல், வெள்ளப்பள்ளம் கிராமத்தில் மீனவர்களுக்கு மீன்பிடி வலைகளை வழங்குகிறார். அதன்பின்னர் இன்று மாலை திருவாரூரில் நடைபெற உள்ள கட்சி பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools