ஓய்வு குறித்து பேசிய ரோகித் சர்மா!
கொரோனா வைரஸ் தொற்றால் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளும், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளும் நடைபெறாமல் உள்ளன. இதனால் நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர்.
இந்த நேரத்தில் இன்ஸ்டாகிராம் லைவ் மூலம் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்கிறார்கள். அதேபோல் ரசிகர்களின் கேள்விகளுக்கும் பதில் அளித்து வருகின்றனர்.
இந்திய அணியின் தொடக்க பேட்ஸ்மேன் ரோகித் சர்மாவும், ஆஸ்திரேலிய அணியின் தொடக்க பேட்ஸ்மேனும் நீண்ட நேரம் தற்போதைய நிலை குறித்து பேசினர்.
அப்போது ரோகித் சர்மா தனது ஓய்வு குறித்து டேவி்ட் வார்னரிடம் பேசினார். அப்போது ரோகித் சர்மா கூறியதாவது:-
நாங்கள் இந்தியாவில் வளரும்போது, கிரிக்கெட் எங்களின் வாழ்க்கை என்றே சொல்வோம். நீங்கள் 38 அல்லது 39 வயதில் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிடும் என்று சொல்லலாம். அதற்கு இன்னும் நீண்ட காலம் செல்ல வேண்டியுள்ளது. நீங்கள் எப்போது கிரிக்கெட் வாழ்க்கையை முடிப்பீர்கள் என்று எனக்குத் தெரியாது, ஆனால் நான் உறுதியாக அதற்கு முன் முடித்துவிடுவேன்’’ என்றார்.
33 வயதாகும் ரோகித் சர்மா கடந்த 2007-ம் ஆண்டு தனது 20 வயதில் இந்திய அணியில் அறிமுகம் ஆனார். 13 வருடம் கிரிக்கெட் விளையாடியுள்ள அவர், 224 ஒருநாள் போட்டியில் 9115 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 49.27 ஆகும். இதில் 29 சதங்கள் அடங்கும். தற்போதுதான் தொடர்ச்சியாக டெஸ்ட் போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.