X

ஓட்டுநர்களுக்கு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்த அரசு போக்குவரத்துத்துறை

போக்குவரத்துத்துறை அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

பேருந்தை சாலையின் நடுவில் பிற வாகனங்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் நிறுத்தக்கூடாது.

பேருந்து நிறுத்தத்தை விட்டு பேருந்தை தள்ளி நிறுத்துவதால், பயணிகள் கீழே விழுந்து காயம் ஏற்படும் சூழ்நிலையும் சில நேரங்களில் மரண விபத்தும் ஏற்பட ஏதுவாகிறது.

அனைத்து ஓட்டுநர், நடத்துநர்களும் உரிய பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றி, இறக்கிவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.