விழுப்புரத்தில் கல்லூரி மாணவி ஒருவர் அரசு பேருந்தில் பயணம் செய்துள்ளார். பேருந்து சென்று கொண்டிருக்கும்போது, அந்த மாணவியிடம் நடத்துனர் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதனால் அந்த மாணவி காணை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
ஓடும் பேருந்தில் நடத்துனரே பாலியல் தொல்லை சம்பவத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்துள்ளது.
கல்லூரி மாணவி சென்னையில் இருந்து விழுப்புரம் அருகே உள்ள கிராமத்திற்கு சென்றதாகவும், அங்கிருந்து சொந்த கிராமத்திற்கு செல்லும் வழியில் இந்த நடத்துனர் மாணவியிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக தெரிகிறது.