ஓடிடியில் வெளியாக இருந்த படம் பைரசியில் வெளியானது! – அதிர்ச்சியில் பாலிவுட்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால், புதிய படங்கள் நேரடியாக ஓடிடி-யில் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மிமி’ எனும் காமெடிப் படம், வருகிற 30-ந் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியிடப்பட இருந்தது. லக்‌ஷ்மண் உடேகர் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், இப்படம் வெளியாக இன்னும் 3 நாட்கள் இருக்கும் நிலையில், சில இணையதளங்களில் ‘மிமி’ படம் திருட்டுத்தனமாக வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் வேறு வழியின்றி திட்டமிட்டதற்கு முன்பாகவே படத்தை ஓடிடி-யில் வெளியிட்டுள்ளனர். இந்தப் படம் இணையத்தில் எப்படி கசிந்தது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விவகாரம் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools