ஐ.பி.எல்- பிளே ஆப் போட்டியில் ஒவ்வொரு டாட் பந்துக்கும் 500 மரக்கன்றுகள் நட பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
பசுமை சூழலியல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. அதாவது, ஐபிஎல் பிளே ஆப் போட்டிகளில் ரன் எடுக்கப்படாத ஒவ்வொரு பந்திற்கும் 500 மரங்கள் நட முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்ற சிஎஸ்கே- குஜராத் டைட்டன்ஸ் இடையிலான போட்டியில் ஒவ்வொரு டாட் பந்துக்கும் எல்.இ.டி ஸ்கிரீனில் பச்சை மரத்தின் எமோஜி காட்சிப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.