X

ஒழுங்கை காப்பாற்ற திறனில்லாத திமுக அரசு – அண்ணாமலை ஆவேசம்

பூந்தமல்லி அருகே உள்ள வளர்புரம் ஊராட்சி மன்ற தலைவரும், பட்டியல் அணி மாநில பொருளாளருமான பி.பி.ஜி.சங்கர் வெடிகுண்டு வீசி கொல்லப்பட்டார். இந்த சம்பவத்துக்கு தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பா.ஜனதா பட்டியலணி மாநில பொருளாளர் பி.பி.ஜி. சங்கர் படுகொலை செய்யப்பட்டுள்ள செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். காவல் துறையை கையில் வைத்திருக்கும் முதல்வரோ சட்டம் ஒழுங்கை காப்பாற்ற திறனில்லாமல் நம்பர் ஒன் முதல்வர் என்று நாளொரு நாடகம் போட்டு மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்.

குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இனியும் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்தால் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.