Tamilசெய்திகள்

ஒலிம்பியாட் செஸ் போட்டி – ஒருங்கிணைப்பு குழு அமைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28-ந் தேதி முதல் ஆகஸ்ட் 10-ந் தேதி வரை சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடக்க உள்ளது.

இந்த நிலையில், 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 23 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்து தமிழக அரசு அரசாணை
வெளியிட்டுள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், டி.ஜி.பி சைலேந்திர பாபு, நாடாளுமன்ற
உறுப்பினர் ராஜா, சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பல்வேறு துறைகளின் முதன்மை செயலாளர்கள் உள்பட 23 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த ஆய்வு கூட்டங்களை ஒருங்கிணைப்புக்குழு மேற்கொள்ளும் என்றும் போட்டியை சிறப்பாக நடத்த ஆலோசித்து பணிகளை செய்யும் என தமிழக அரசு
தெரிவித்துள்ளது.