Tamilவிளையாட்டு

ஒலிம்பிக் ஹாக்கி – முதல் போட்டியில் இந்தியா, நியூசிலாந்து மோதல்

ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அடுத்த ஆண்டு ஜூலை 24-ந் தேதி முதல் ஆகஸ்டு 9-ந் தேதி வரை நடக்கிறது. இதில் ஆக்கி போட்டிக்கான அட்டவணையை சர்வதேச ஆக்கி சம்மேளனம் நேற்று வெளியிட்டது. ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தலா 12 அணிகள் பங்கேற்கின்றன. அவை இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 4 இடங்களை பெறும் அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும்.

‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய ஆண்கள் அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் நியூசிலாந்தை (ஜூலை 25-ந் தேதி) சந்திக்கிறது. ஆஸ்திரேலியாவை ஜூலை 26-ந் தேதியும், ஸ்பெயினை ஜூலை 28-ந் தேதியும், நடப்பு சாம்பியன் அர்ஜென்டினாவை ஜூலை 30-ந் தேதியும், போட்டியை நடத்தும் ஜப்பானை ஜூலை 31-ந் தேதியும் இந்திய அணி எதிர்கொள்கிறது. இதே போல் ‘ஏ’ பிரிவில் அங்கம் வகிக்கும் இந்திய பெண்கள் அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் நெதர்லாந்துடன் (ஜூலை 25-ந் தேதி) மோதுகிறது. அடுத்து வரும் லீக் ஆட்டங்களில் ஜெர்மனியை ஜூலை 27-ந் தேதியும், நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை ஜூலை 29-ந் தேதியும், அயர்லாந்தை ஜூலை 31-ந் தேதியும், தென்ஆப்பிரிக்காவை ஆகஸ்டு 1-ந் தேதியும் சந்திக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *