X

ஒலிம்பிக் வில்வித்தை ரேங்கிங் சுற்று – ஆண்கள் பிரிவில் இந்திய வீரர்கள் ஏமாற்றம்

வில்வித்தை ஆண்கள் ஒற்றையர் பிரிவு ரேங்கிங் போட்டி இன்று காலை நடைபெற்றது. இந்தியா சார்பில் அதானு தாஸ், தருண்தீப் ஜாதவ், பிரவீன் ஜாதவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஒவ்வொரு வீரர்களும் தலா 72 அம்புகள் எய்தல் வேண்டும். முதல் 36 அம்புகள் எய்த பின்னர் இடைவெளி விடப்படும். அதன்பின் மீதமுள்ள 36 அம்புகள் எய்தல் வேண்டும்.

பிரவீன் ஜாதவ் முதல் பாதியில் 329 புள்ளிகள் பெற்றார். இதில் 12 முறை 10 புள்ளிகள் பெற்றார்.  நான்கு முறை மையப்புள்ளியை (Xs) அவரது அம்பு தாக்கியது.  2-வது பாதியில் 327 புள்ளிகள் பெற்று, மொத்தம் 656 புள்ளிகளுடன் 31-வது இடத்தை பிடித்தார். மொத்தமாக 22 முறை 10 புள்ளிகள் பெற்றார். ஐந்து முறை மையப்புள்ளியை (Xs) அவரது அம்பு தாக்கியது.

அதானு தாஸ் முதல் பாதியில் 329  புள்ளிகளும், 2-வது பாதியில் 324 புள்ளிகள் என மொத்தம் 653 புள்ளிகள் பெற்று 35-வது இடத்தை பிடித்தார். 24 முறை 10 புள்ளிகள் பெற்றார். ஏழு முறை மையப்புள்ளியை (Xs) அவரது அம்பு தாக்கியது.

தருண்தீப் ராய் முதல் பாதியில் 323  புள்ளிகளும், 2-வது பாதியில் 329 புள்ளிகள் என மொத்தம் 652 புள்ளிகள் பெற்று 37-வது இடத்தை பிடித்தார். 26 முறை 10 புள்ளிகள் பெற்றார். ஆறு முறை மையப்புள்ளியை (Xs) அவரது அம்பு தாக்கியது.

31-வது இடத்தை பிடித்துள்ள பிரவீன் ஜாதவ், அடுத்த சுற்றில் (1/32)  34-வது இடத்தை பிடித்துள்ள தைவான் (ஆர்.ஓ.சி.) வீரர் கால்சனை எதிர்கொள்கிறார்.

35-வது இடத்தை பிடித்துள்ள அதானு தாஸ், 1/32  சுற்றில் 30-வது இடத்தை பிடித்த சீன தைஃபேயின் யு-செங் டெங்கை எதிர்கொள்கிறார்.

37-வது இடத்தை பிடித்துள்ள தருண்தீப் ராய், 1/32  சுற்றில் 28-வது இடத்தை பிடித்த உக்ரைன் வீரர் ஒலேக்சி ஹன்பின்-ஐ எதிர்கொள்கிறார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் தீபிகா குமாரி 9-வது இடத்தை பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.