X

ஒலிம்பிக் போட்டி – துடுப்பு படகு போட்டி முடிவுகள்

32-வது ஒலிம்பிக் போட்டி இன்று ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கோலாகலமாக தொடங்குகிறது. இந்திய நேரப்படி இன்று மாலை 4.30 மணிக்கு துவக்கவிழா நடைபெறுகிறது.

இதற்கிடையில், துவக்கவிழா இன்று நடைபெற உள்ள நிலையில் கடந்த 21-ம் தேதி முதல் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கிவிட்டன. பல்வேறு விளையாட்டுகளுக்கு பயிற்சி போட்டிகள், தகுதிச்சுற்று போட்டிகள் என பல்வேறு கட்டங்களாக போட்டிகள் ஏற்கனவே நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில், துடுப்பு படகு போட்டியின் முதல்சுற்றுகள் இன்று நடைபெற்றது. ஆண்கள் சிங்கிள் ஸ்கல்ஸ் ஹீட் 6 பிரிவுகள், பெண்கள் சிங்கிள் ஸ்கல்ஸ் ஹீட் 6 பிரிவுகள், ஆண்கள் டபுள் ஸ்கல்ஸ் ஹீட் 3 பிரிவுகள், பெண்கள் டபுள் ஸ்கல்ஸ் ஹீட் 3 பிரிவுகள் ஆண்கள் குவாட்ருபெல் ஸ்கல்ஸ் ஹீட் 2 பிரிவுகள், பெண்கள் குவாட்ருபெல் ஸ்கல்ஸ் ஹீட் 2 பிரிவுகளாக இன்று போட்டி நடைபெற்றது.

துடுப்பு படகு போட்டி சிங்கிள் ஸ்கல்ஸ் (ஆண்கள் / பெண்கள்) 6 சுற்றுகளாக நடைபெற்றது. ஒவ்வொரு சுற்றிலும் தலா 6 வீரர்/வீராங்கனைகள் என மொத்தம் 36 வீரர்/ வீராங்கனைகள் பங்கேற்றனர். ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பிடித்த வீரர்/ விராங்கனைகள் (மொத்தம் 18 பேர்) காலிறுதி சுற்றுக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளனர்.

துடுப்பு படகு போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் கடைசி 3 இடங்களை பிடித்த வீரர்/ வீராங்கனைகள் ரிபிசாஜ் சுற்றுக்கு செல்கின்றனர். ரிபிசாஜ் பிரிவில் நடைபெறும் போட்டியில் வெற்றிபெறும் வீரர்கள் காலிறுதி சுற்றுக்கு தகுதி பெறலாம்.

துடுப்பு படகு போட்டி முடிவுகள்

ஆண்கள் சிங்கிள் ஸ்கல்ஸ் – ஹீட் சுற்றுகளில் முதல் 3 இடங்களை பிடித்த வீரர்கள் மற்றும் நாடுகள் விவரம்:

ஹீட் – 1

கிஜேடில் போர்ச் (நார்வே)
பெண்ட்ரஸ் பீட்டர்வெரி மோல்னர் (ஹங்கேரி)
லூகா வெத்ரின் ப்ரியரா (பிரேசில்)

ஹீட் – 2

ஸ்டிபென்ஸ் டோஸ்கஸ்(கீரிஸ்)
ஜோர்டன் பெரி (நியூசிலாந்து)
அல்வரோ டோரஸ் மசியஸ் (பெரு)

ஹீட் – 3

ஸ்வெரி நெல்சன் (டென்மார்க்)
குனரோ அல்பர்டோ டி மௌரோ (இத்தாலி)
லடிஸ்லாவா ஹயோவல்வ் (கஜகஸ்தான்)

ஹீட் – 4

டிர்வர் ஜோன்ஸ் (கனடா)
மிண்டகஸ் கிஷ்ஹோனிஸ் (லிதுவெனியா)
ஓனட் கஷக்லி (துருக்கி)

ஹீட் – 5

ஹோமீர் மார்டின் (குரோஷியா)
அலெக்சாண்டர் யாசோவ்கின் (ரஷிய ஒலிம்பிக் கமிட்டி)
கிரிஸ் நிவெர்சி (பிலிப்பைன்ஸ்)

ஹீட் – 6

ஒலிவ் சிட்லர் (ஜெர்மனி)
யுடா ரஹவா (ஜப்பான்)
அப்துல்ஹலித் ஹில்பனா (எகிப்து)

பெண்கள் சிங்கிள் ஸ்கல்ஸ் – ஹீட் சுற்றுகளில் முதல் 3 இடங்களை பிடித்த வீராங்கனைகள் மற்றும் நாடுகள் விவரம்:

ஹீட் – 1

கீரா ஹோட்லர் (அமெரிக்கா)
டட்சியானா லிமோசிவ் (பெலாரஸ்)
நசானின் மலஇவ் (ஈரான்)

ஹீட் – 2

சண்ட்னா புஷ்புயூர் (அயர்லாந்து)
கினியா லிஷுஹா (மெக்சிகோ)
அனீடா யுர்டியூ (கிரீஸ்)

ஹீட் – 3

ஹனா பிரகஸ்டீன் (ரஷிய ஒலிம்பிக் கமிட்டி)
யன் ஜியங் (சீனா)
விரோனிகா டூரோ அரனா (பெரூடா ரிகா)

ஹீட் – 4

விக்டோரியா தோர்ன்லி (கிரேட் பிரிட்டன்)
ஜீனைன் மினின் (சுவிஸ்சர்லாந்து)
லோவிசா கிளாசன் (ஸ்வீடன்)

ஹீட் – 5

மெக்டலினா லோபிங் (ஆஸ்திரியா)
கர்லின் சீமென் (கனடா)
மெய்கி டைக்மென் (நபிபியா)

ஹீட் -6

இமா டுவிங் (நியூசிலாந்து)
அனா சாரா சோபியா ஸ்வாகர் (நெதர்லாந்து)
ஜூவானா அர்சிக் (செர்பியா)

ஆண்கள் டபுள் ஸ்கல்ஸ் 3 சுற்றுகளாக நடைபெற்றது. இதில் ஒவ்வொரு சுற்றிலும் முதல் 3 இடங்களை பிடித்த அணிகள் நேரடியாக காலிறுதிக்கு தகுதிப்பெற்றுள்ளன.

ஆண்கள் டபுள் ஸ்கல்ஸ் – ஹீட் சுற்றுகளில் முதல் 3 இடங்களை பிடித்த நாடுகள்

ஹீட் – 1

பிரான்ஸ்
சீனா
ரஷிய ஒலிம்பிக் கமிட்டி

ஹீட் – 2

போலாந்து
சுவிஸ்சர்லாந்து
நியூசிலாந்து

ஹீட் – 3

நெதர்லாந்து
கிரேட் பிரிட்டன்
ருமேனியா

பெண்கள் டபுள் ஸ்கல்ஸ் 3 சுற்றுகளாக நடைபெற்றது. இதில் ஒவ்வொரு சுற்றிலும் முதல் 3 இடங்களை பிடித்த அணிகள் நேரடியாக காலிறுதிக்கு தகுதிப்பெற்றுள்ளன.

பெண்கள் டபுள் ஸ்கல்ஸ் – ஹீட் சுற்றுகளில் முதல் 3 இடங்களை பிடித்த நாடுகள்

ஹீட் – 1

நியூசிலாந்து
அமெரிக்கா
பிரான்ஸ்

ஹீட் – 2

ரூமெனியா
கனடா
இத்தாலி

ஹீட் – 3

நெதர்லாந்து
லுதுவேனியா
ஆஸ்திரேலியா

குவாட்ருபெல் ஸ்கல்ஸ் பிரிவில் 2 ஹீட் சுற்றுகள் நடைபெறும். ஒவ்வொரு சுற்றிலும் தலா 5 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு சுற்றிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதி ஏ-க்கு தகுதி பெறுகின்றன.

ஆண்கள் குவாட்ருபெல் ஸ்கல்ஸ் – ஹீட் சுற்றுகளில் முதல் 2 இடம் பிடித்து இறுதி ஏ-பிரிவுக்கு தகுதி பெற்ற  நாடுகள்

ஹீட் – 1

நெதர்லாந்து
ஆஸ்திரேலியா

ஹீட் – 2

போலாந்து
இத்தாலி

பெண்கள் குவாட்ருபெல் ஸ்கல்ஸ் – ஹீட் சுற்றுகளில் முதல் 2 இடம் பிடித்து இறுதி ஏ-பிரிவுக்கு தகுதி பெற்ற  நாடுகள்

ஹீட் – 1

ஜெர்மனி
நெதர்லாந்து

ஹீட் – 2

சீனா
போலாந்து