டென்னிஸ் அரங்கில் தலைசிறந்த வீரராக திகழ்பவர் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர். 20 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்று சாதனைப் படைத்துள்ளார்.
38 வயதாகும் பெடரர் தற்போது பெரும்பாலான ஓபன்களில் விளையாடுவது கிடையாது. முக்கியான தொடர்களில் மட்டுமே விளையாடுகிறார். அவர் எப்போது ஓய்வு பெறுவார்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்நிலையில் அடுத்த வருடம் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் தொடரிலும், பிரான்ஸில் நடைபெறும் பிரெஞ்ச் ஓபனிலும் விளையாடுவேன் என்று தெரிவித்துள்ளார்.
மூன்று வருடங்கள் பிரெஞ்ச் ஓபனில் விளையாடாத ரோஜர் பெடரர், இந்த ஆண்டு நடைபெற்ற தொடரில் அரையிறுதி வரை முன்னேறினார்.
ஒலிம்பிக்கில் விளையாடுவது குறித்து ரோஜர் பெடரர் கூறுகையில் ‘‘டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் விளையாடுவேன். அதேபோல் பிரெஞ்ச் ஓபனிலும் விளையாடுவேன். இந்தத் தொடர்களுக்கு முன் பெரும்பாலான தொடர்களில் விளையாடமாட்டேன். ஏனென்றால், விளையாட்டில் இருந்து ஒதுங்கி இருந்து குடும்பத்துடன் நேரத்தை செலவழிக்க வேண்டியுள்ளது’’ என்றார்.