X

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய துப்பாக்கி சுடுதல் அணி வீரர்களின் விவரம்

பெண்கள் 50 மீட்டர் ரைபிள் 3 நிலை (பொசிஷன்)

தேஜஸ்வினி சாவந்த்

தேஜஸ்வினி சாவந்த் 1980 செப்டம்பர் 12-ம் தேதி பிறந்தார். இவர் மராட்டிய மாநிலத்தில் பிறந்தார். இவர் டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்கள் 50 மீட்டர் ரைபிள் 3 நிலை துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் பங்கேற்கிறார். 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் இரண்டு தங்கப்பதக்கம் வென்றுள்ளார். 2009 ஆம் ஆண்டு சர்வதேச துப்பாக்கிச்சுடுதல் ஸ்போர்ட் பெடரேஷன் உலக கோப்பை போட்டியில் 50 மீட்டர் ரைபிள் 3 நிலை பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார். 2010 ஆண்டு
நடைபெற்ற 50 மீட்டர் ரைபி ப்ரோனி இவெண்ட் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றார். இவர் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

பெண்கள் 25 மீட்டர் பிஸ்டல்

மனு பக்ஹர்

அரியானாவை சேர்ந்த மனு பக்ஹர் 2002 பிப்ரவரி 18-ம் தேதி பிறந்தார். 19 வயதான மனு பக்ஹர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பெண்கள் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் பங்கேற்கிறார். 2018 ஆம் ஆண்டு சர்வதேச துப்பாக்கிச்சுடுதல் ஸ்போர்ட் பெடரேஷன் உலக கோப்பை போட்டியில் மனு பக்ஹர் 2 தங்கப்பதக்கம் வென்றுள்ளார். மிகக்குறைந்த வயதில் (16) சர்வதேச துப்பாக்கிச்சுடுதல் ஸ்போர்ட் பெடரேஷன் உலக கோப்பை போட்டியில் தங்கம் வென்ற நபர் என்ற பெருமையை மனு பக்ஹர் பெற்றுள்ளார். 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

ரஹி சர்னோபெட்

ரஹி சர்னோபெட் 1990 அக்டோபர் 30-ம் தேதி பிறந்தார். இவர் மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர். 30 வயதான ரஹி சர்னோபெட் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பெண்கள் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் பங்கேற்கிறார். 2013, 2019, 2021 ஆம் ஆண்டுகளில் சர்வதேச துப்பாக்கிச்சுடுதல் ஸ்போர்ட் பெடரேஷன் உலக கோப்பை போட்டிகளில் ரஹி சர்னோபெட் 4 முறை தங்கப்பதக்கம் வென்றுள்ளார். 2010,2014 ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் 2 முறை தங்கப்பதக்கம் வென்றுள்ளார். 2018 ஆசியன் விளையாட்டில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

ஸ்கீட்

ஆண்கள் பிரிவு

அங்கட் பாஜ்வா

அங்கட் பாஜ்வா 1995 ஆம் ஆண்டு நவம்பர் 29-ம் தேதி சத்தீஷ்கரில் பிறந்தார். இவர் டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்கள் ஸ்கீட் பிரிவில் பங்கேற்கிறார். 2018 ஆசியன் சூட்கன் சாம்பியன்ஷிப் போட்டியில் ஸ்கீட் பிரிவில் அங்கட் பாஜ்வா தங்கப்பதக்கம் வென்றுள்ளார். ஆசியன் துப்பாக்கிச்சுடுதல் போட்டியின் ஸ்கீட் பிரிவில் 2015 மற்றும் 2019 ஆண்டுகளில் 3 முறை தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

அமிராஜ் அகமது கான்

அமிராஜ் அகமது கான் உத்தரகாண்ட் மாநிலத்தில் 1975 ஆம் ஆண்டு நம்பவர் 2-ம் தேதி பிறந்தார். இவர் டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்கள் ஸ்கீட் பிரிவில் பங்கேற்கிறார். இவர் 2007 மற்றும் 2008 சிங்கப்பூர் ஒப்பன் துப்பாக்கிச்சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டிகளில் 2 தங்கப்பதக்கம் வென்றுள்ளார். 2010 காமன்வெல்த் துப்பாக்கிச்சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.