ஒலிம்பிக் தொடரின் தகுதிச் சுற்றுக்கு தயாராகும் வகையில் இந்தியா, ஜப்பான், நியூசிலாந்து அணிகள் உள்பட நான்கு அணிகள் இடையில் பயிற்சி தொடர் நடைபெற்றது.
இதில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறின. நேற்று இறுதிப் போட்டி நடைபெற்றது. ராபின் ரவுண்டு லீக் சுற்றில் இந்தியா நியூசிலாந்திடம் 1-2 என தோற்றிருந்தது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இன்று விளையாடினர்.
இந்திய வீரர்களின் ஆட்டத்திற்கு நியூசிலாந்து வீரர்களால் ஈடுகொடுக்க முடியவில்லை. ஆட்டத்தின் 7-வது நிமிடத்தில் கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் முதல் கோலை அடித்தார். 18-வது நிமிடத்தில் ஷம்ஷெர் சிங்கும், 22-வது நிமிடத்தில் நீலகண்ட ஷர்மாவும், 26-வது நிமிடத்தில் குர்சாஹிப்ஜித் சிங்கும், 27-வது நிமிடத்தில் மந்தீப் சிங்கும் கோல் அடிக்க நியூசிலாந்து இந்தியா 5-0 என வீழ்த்தியது.