X

ஒலிம்பிக் ஆசிய தகுதி சுற்று குத்துச்சண்டை – சாக்‌ஷி சவுத்ரி காலியிறுதிக்கு முன்னேற்றம்

ஒலிம்பிக் போட்டி டோக்கியோவில் ஜூலை 24-ந்தேதி முதல் ஆகஸ்டு 9-ந்தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான ஆசிய தகுதி சுற்று குத்துச்சண்டை போட்டி ஜோர்டானில் உள்ள அம்மான் நகரில் நேற்று முன் தினம் தொடங்கியது.

பெண்களுக்கான 57 கிலோ எடைபிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீராங்கனை சாக்‌ஷி சவுத்ரி தாய்லாந்தை சேர்ந்த நிலாவன் டெச்சாசுயெப்பை எதிர்கொண்டார். 19 வயதே ஆன சாக்‌ஷி சவுத்ரி ஆசிய போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற நிலாவன் டெச்சாசுயெப்பை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

சாக்‌ஷி சவுத்ரி இரண்டு முறை இளையோர் உலககோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. காலிறுதியில் சாக்‌ஷி சவுத்ரி கொரியாவைச் சேர்ந்த இம் ஏஜியை எதிர்கொள்கிறார். இந்த போட்டி 9-ந்தேதி நடக்கிறது.

Tags: sports news