ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய நீச்சள் வீரர்களைப் பற்றிய விவரம்

ஸ்ரீஹரி நடராஜ் 2001 ஜனவரி 16-ம் தேதி பிறந்தார். 21 வயதான நடராஜ் பெங்களூரை சேர்ந்தவர். இவர் டோக்கியோ ஒலிம்பிக்கில் நீச்சல் போட்டியின் ஆண்கள் 100 மீட்டர் பேக்ஸ்டாக் பங்கேற்கிறார்.

ஆண்கள் 200 மீட்டர் பட்டர்ஃப்லை

சஞ்ஜன் பிரகாஷ்

கேரளாவை சேர்ந்த சஞ்ஜன் பிரகாஷ் 1993 செப்டம்பர் 14-ம் தேதி பிறந்தார். இவர் 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய விளையாட்டு போட்டியில் 6 தங்கம் மற்றும் 3 சில்வர் பதக்கங்களை வென்று தடகள பிரிவுக்கான இந்திய தேசிய விளையாட்டு போட்டிகளின் சிறந்த வீரராக முன்னேறினார். இவர் டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்டுகள் 200 மீட்டர் பட்டர்ஃப்லை பிரிவில் பங்கேற்கிறார். கேரளாவை சேர்ந்த சஞ்சன் பிரகாஷ் தமிழ்நாட்டின் நெய்வேலியில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார். சிதம்பரத்தில் உள்ள கல்லூரியில் இளநிலை படிப்பை முடித்தார். சஞ்ஜன் பிரகாஷ் தற்போது கேரள காவல்துறையில் பணியாற்றி வருகிறார்.

பெண்கள் 100 மீட்டர் பேக்ஸ்டோக்

மானா படேல்

மானா படேல் 2000 மார்ச் 18-ம் தேதி பிறந்தார். 21 வயதான மானா படேல் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர். இவர் டோக்கியோ ஒலிம்பிக்கில் நீச்சல் போட்டியில் பெண்கள் 100 மீட்டர் பேக்ஸ்டோக் பிரிவில் பங்கேற்கிறார். ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் பங்கேற்கும் முதல் இந்திய பெண் வீராங்கணை இவர் ஆவார். 2016 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டில் மானா படேல் 4 தங்கப்பதங்கம் வென்றுள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools