ஒற்றுமையுடன் அதிமுக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
மதுரையில் வருவாய்த்துறை அமைச்சர் ஆ.பி.உதயகுமார் செய்தியாளர்களுக்கு கூறியதாவது:
மினி பொதுத்தேர்தல் என கருதப்பட்ட சட்டமன்ற இடைத்தேர்தலில் ஈபிஎஸ், ஓபிஎஸ் தலைமையில் செயல்பட்டு வெற்றி பெற்றோம். எடப்பாடி பழனிசாமி – ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை முன்னிறுத்தியே உள்ளாட்சித்தேர்தலில் வெற்றி பெற்றோம்.
அதிமுகவினர் ஒற்றுமையுடன் இருப்பதாலேயே மக்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளது. எளிமையின் அடையாளமான முதலமைச்சர் அதிமுக அரசு வலிமையான அரசு என்பதை நிரூபித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி தலைமையிலும் ஓ.பன்னீர்செல்வம் வழிகாட்டல் படியும் அதிமுக செயல்படும்.
இந்த அரசு பிழைக்குமா? என கேள்வி எழுந்த சூழலில், தற்போது நிலையான அரசு செயல்பட்டு வருகிறது.
முதல்வரை முன்னிறுத்தித்தான் சட்டமன்ற தேர்தலை அதிமுக சந்திக்க வேண்டும். ஒற்றுமையுடன் அதிமுக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.