வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் 58வது ஜெயந்தி விழா மற்றும் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தின் 15ம் ஆண்டு விழாவை முன்னிட்டு வருகிற 13.03.2019 மாசி மாதம் 29ம் தேதி புதன்கிழமை முதல் 17.03.2019 பங்குனி மாதம் 3ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை சைவம், வைணவம், சாக்தம், சௌரம், கௌமாரம், காணாபத்யம், என ஷண்மத கடவுள்களை பிரதிஷ்டை செய்து ஷண்மத பீடமாக திகழ்ந்து வரும் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில், ஷண்மத தெய்வங்களை போற்றி ஆராதிக்கும் விதத்தில் ஷோடச (16) திருக்கல்யாண மஹோத்சவமும் ஸ்ரீ ஆரோக்யலக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாளுக்கு “சஹஸ்ர கலசாபிஷேகமும்”, ஸ்ரீனிவாசர் திருக்கல்யாணத்துடன் 600க்கு மேற்பட்ட தவில் மற்றும் நாதஸ்வர கலைஞர்கள் பஙேற்கும் நாதசங்கமம் நிகழ்ச்சியுடன் பல்வேறு வைபவங்கள் ஸ்வாமிகளின் அருளானைப்படி நடைபெற உள்ளது.
நிகழ்ச்சி நிரல்:
விழா இனிதே நடைபெற 22.02.2019 மாசி மாதம் 10ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 6.00 மணி முதல் 7.00 மணி வரை மங்கள இசை முழங்க மஹா கணபதி ஹோமத்துடன் பந்தகால் முகூர்த்தம்.
கோமாதா திருக்கல்யாணம் – 108 சுமங்கலி பூஜை – சமஷ்டி உபநயனம்:
13.03.2019 மாசி மாதம் 29ம் தேதி புதன்கிழமை காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை முப்பத்தி முக்கோடி தேவர்களின் ஆசி வேண்டியும், சகல விதமான தோஷங்கள் நீங்கவும், சகல விதமான ஜீவராசிகளின் நலன் வேண்டி கோமாதா திருக்கல்யாணமும், கணவனுடைய ஆயுள் தீர்க்கம் வேண்டியும், தம்பதிகள் ஒற்றுமைக்காகவும், சௌபாக்யங்கள் கிடைக்க வேண்டியும், தீர்க்க சுமங்கலி பாக்யம் கிடைக்க வேண்டி 108 பெண்கள் பங்கேற்கும் சுமங்கலி பூஜையும், வேத மாதாவின் அருள் வேண்டியும், வேதங்களை போற்றி ஆராதிக்கும் விதத்திலும், அந்தணர்களின் வாழ்வு சிறக்கவும் சமஷ்டி உபநயனமும் நடைபெறுகிறது.
துளசி செடி நெல்லி செடி திருக்கல்யாணம் – 108 கன்யா பூஜை:
14.03.2019 மாசி மாதம் 30ம் தேதி வியாழக்கிழமை காலை 6.30 முதல் மதியம் 1.30 வரை ஒவ்வொருவருக்கும் மஹாவிஷ்ணு – மஹாலக்ஷ்மியின் அருள் கிடைத்து வாழ்வில் வளம் பெற துளசி தேவி – நெல்லிராஜா ( துளசி செடி – நெல்லி செடி) திருக்கல்யாணமும், பெண் சாபங்கள் நீங்கவும், குலதெய்வ தோஷங்கள் அகலவும், பாலாவின் பரிபூரண அருள் கிடைத்து குடும்பங்களில் சுபிட்சம் ஏற்படவும், சுப காரியங்கள் நடைபெறவும் 108 கன்னிபெண்கள் பங்கேற்கும் கன்யா பூஜை நடைபெறுகிறது.
வேம்பு மரம் அரச மரம் திருக்கல்யாணம் – 108 தம்பதி பூஜை:
15.03.2019 பங்குனி மாதம் 1ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 6.30 முதல் மதியம் 2.00 வரை இயற்கை வளம் வேண்டியும், மழை வேண்டியும், விவசாய பெருமக்கள் நலம் வேண்டியும், கிராம தேவதைகளின் அருள் வேண்டியும், அனைத்து விதமான தடைகள் நீங்கவும் நிம்மலக்ஷ்மி – அஸ்வத் ராஜா (வேப்ப மரம் – அரச மரம்) திருக்கல்யாணமும், தம்பதிகள் ஒற்றுமை ஏற்படவும், சௌபக்யங்கள் கிடைக்கவும், குடும்பங்கள் சிறந்து விளங்கவும், பல்வேறு விதமான சாபங்கள் விலகவும், ஆண் – பெண்கள் ஒருவரை ஒருவர் புரிந்த்கொண்டு மகிழ்ச்சியாக வாழவும் 108 தம்பதிகள் பங்கேற்கும் தம்பதி பூஜை நடைபெறுகிறது.
ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீனிவாசர் திருக்கல்யாணம் – மூலவர் ஸ்ரீ தன்வந்திரிக்கு 1008 கலச திருமஞ்சனம் – நாதசங்கம நிகழ்ச்சி:
16.03.2019 பங்குனி மாதம் 2ம் தேதி சனிக்கிழமை காலை 10.30 முதல் 1.00 மணி வரை நோய் நொடிகள் நீங்கவும், ஆரோக்யமான வாழ்கை வாழவும், பயங்கள் அகலவும், குடும்பங்கள் மேன்மை அடையவும், மனரீதியான நோய்களிலிருந்து விடுதலை பெறவும், போன்ற பல்வேறு காரணங்களுக்காக 600க்கும் மேற்பட்ட தவில் மற்றும் நாதஸ்வர இசை கலைஞ்சர்கள் பங்கேற்கும் நாதசங்கம நிகழ்ச்சியுடன் ஸ்ரீ ஆரோக்யலக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாளுக்கு மஹா தன்வந்திரி யாகத்துடன் சஹஸ்ர கலச திருமஞ்சனம் நடைபெற்று ஸ்ரீ பத்மாவதி ஸ்ரீனிவாசருடைய பரிபூரண அருள் வேண்டி மாலை 5.00 மணி முதல் 7.30 வரை ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீனிவாசர் திருக்கல்யாணம் சதுர்வேத பாராயணத்துடன் நடைபெறுகிறது.
ஷோடச (16) திருக்கல்யாண மஹோத்சவம் –
ஸ்வாமிகளின் 58வது ஜெயந்தி விழா:
17.03.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் 11.00 மணி வரை பக்தர்கள் முன்னிலையில், ஷண்மத தெய்வங்களுக்கு ஒரே மேடையில் ஒரே நேரத்தில், ஷண்மத பீடத்தில் ஷோடச (16) திருக்கல்யாண மஹோத்சவம் திருமண வரம் வேண்டியும், இல்லறம் சிறக்கவும், இறைவன் இறைவி அருள் பெறவும்
காணாபத்யம் சமய திருக்கல்யாணம்:
1. ஸ்ரீ சித்தி புத்தி சமேத விநாயகர்.
சைவ சமய திருக்கல்யாணங்கள்
2. ஸ்ரீ சரஸ்வதி சமேத ப்ரஹ்மா.
3. ஸ்ரீ மரகதாம்பிகை சமேத மரகதேஸ்வரர்.
4. ஸ்ரீ அனகாதேவி சமேத தத்தாத்ரேயர்.
5. ஸ்ரீ பூர்ண புஷ்கலா சமேத தர்மசாஸ்தா.
6. ஸ்ரீ சித்ரலேகா சமேத குபேரர்.
7. ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத சொர்ண பைரவர்.
வைணவ சமய திருக்கல்யாணங்கள்
8. ஸ்ரீ ஆரோக்யலக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாள்.
9. ஸ்ரீ ராஜ்யலக்ஷ்மி செஞ்சுலக்ஷ்மி சமேத நரசிம்மர்.
10. ஸ்ரீ ராதா ருக்மணி சமேத ஸ்ரீகிருஷ்ணர்.
11. ஸ்ரீ லக்ஷ்மி சமேத ஹயவதன பெருமாள்.
12. ஸ்ரீ ரமா சமேத சத்யநாரயணர்.
13. ஸ்ரீ விஜயலக்ஷ்மி சமேத சுதர்சன பெருமாள்.
சௌரம் சமய திருக்கல்யாணம் : சூர்யனை போற்றும் விதமாக
14. ஸ்ரீ சீதாலக்ஷ்மி சமேத பட்டாபிஷேக ராமர்.
ஸ்ரீ சாக்தம் சமய திருக்கல்யாணம்:
15. ஸ்ரீ ப்ரத்யங்கிரா தேவி சமேத சரபேஸ்வரர் (ஸ்ரீ பைரவி சமேத பைரவர்).
கௌமாரம் சமய திருக்கல்யாணம் :
16. ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத சுப்ரமண்ணியர்.
மேற்கண்ட 16 தெய்வங்களுக்கும் யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி 16 தெய்வ திருமணங்களுடன் இதர வைபவங்கள் சிறப்புடன் நடைபெறுகிறது.
இறைவன், இறைவிக்கு திருமணம் நடைபெற்ற ஸ்தலங்களுக்கும், மற்றும் இதர ஸ்தலங்களுக்கும் சென்று சிறப்பு பிரார்த்தனை:
இவ்விழா சிறப்பாக நடைபெற திருமணஞ்சேரி, ஆலங்குடி, ஸ்ரீவாஞ்சியம், திருமருகல், திருவிடந்தை, திருவேதிக்குடி, பிள்ளையார்பட்டி, திருவீழிமிழலை, திருப்பரகுன்றம், கன்னியாகுமரி, காஞ்சி, மாங்காடு, ஸ்ரீவில்லிபுத்தூர், திருச்செந்தூர், திருசத்திமுற்றம், கேரளத்தின் திருமணஞ்சேரி, ஆரியங்காவு மற்றும் மணமுடிச்சநல்லூர், திருப்பாச்சேத்தி, திருவெண்காடு, திருவேள்விக்குடி, திருநெல்வேலி, திருவாரூர், வேதாரண்யம், திருவிடைமருதூர், கும்பகோணம், திருநல்லூர், திருமழப்பாடி, திருப்பாலைத்துறை, பந்தநல்லூர், மதுரை, திருக்குற்றாலம், திருவேற்காடு, திருச்சோற்றுத்துறை, வைத்தீஸ்வரன் கோவில், திருநாகேஸ்வரம், பூவாளுர் சக்தி கோவில், திருமணமங்கலம் விசாலேஸ்வரன் கோவில், தாடிக்கொம்பு, திருத்துறைபூண்டி போன்ற திருக்கல்யாண உற்சவம் விமர்சையாக நடைபெறும் இத்தலங்களுக்கும், இதர ஷண்மத ஸ்தலங்களுக்கும், பல்வேறு புனித ஸ்தலங்களுக்கும் “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் முரளிதர ஸ்வாமிகள் யாத்திரை சென்று, இவ்வைபவங்களின் மஹோத்சவ பத்ரிகையை இறைவன் இறைவியிடம் வைத்து, பிரார்த்தித்து சிறப்பு ஆராதனைகள் செய்து, அங்குள்ள புனித தீர்த்தங்கள், கற்கள், மூலிகை சமித்துக்கள், மூலிகை வேர்கள், ஸ்தல விருட்சங்களின் புஷ்பங்கள், காய்கள், இலைகள் கொண்டு நடைபெற உள்ள வைபத்தில் அனைவரும் கலந்துகொண்டு இறையருள் பெற்று, ஆரோக்யம், ஐஸ்வர்யம், ஆனந்தம் பெற அன்புடன் அழைக்கின்றோம்.
மேற்கண்ட வைபவங்களில் அனந்தலை கிராம பஞ்சாயத்து மற்றும் வாலாஜா நகர முன்னாள் தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், நாட்டாமைக்காரர்கள், ஊர் பொதுமக்கள், நகர பொதுமக்கள், சுற்று புற கிராம மக்கள், மடாதிபதிகள், ஆதீனங்கள், மஹான்கள், அருளாளர்கள், சாதுக்கள், மற்றும் முன்னாள், இன்னாள் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், பாரளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர் பெருமக்கள், நீதியரசர்கள், ஆட்சித்தலைவர்கள், அரசு உயர் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், மருத்துவர்கள், ஆன்றோர்கள், சான்றோர்கள், திரைப்பட துறையினர்கள், கல்வியாளர்கள், வழக்கறிஞர்கள், மாணவ மாணவிகள், புகைப்பட கலைஞர்கள், செய்தியாளர்கள், ஊடகத்துறையினர்கள், போன்ற இன்னும் பல்வேறு தரப்பு மக்களும் கலந்துகொண்டு சிறப்பிக்க இசைந்துள்ளனர். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை – 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 – 230033, செல் – 9443330203
Web: www.danvantritemple.org , www.danvantripeedam.blogspot.in
Email: danvantripeedam@gmail.com