ஒரே ஆண்டில் இரண்டு படம் – விஜய் புது முடிவு
விஜய் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மாஸ்டர்’. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய்யுடன் விஜய் சேதுபதி, சாந்தனு, மகேந்திரன், அர்ஜூன் தாஸ், மாளவிகா மோகன், ஆண்ட்ரியா, ரம்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இப்படம் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக திரையரங்கங்கள் மூடப்பட்டிருப்பதால் இன்னும் வெளியாகாமல் இருக்கிறது.
இந்த நிலையில் தனது ரசிகர்களின் ஏமாற்றத்தை தற்போது ஈடு செய்யும் வகையில் நடிகர் விஜய் திடீர் முடிவு ஒன்றை எடுத்திருக்கிறாராம். மாஸ்டர் திரைப்படத்திற்காக ஆவலுடன் காத்திருந்த தனது ரசிகர்களுக்கு வரவிருக்கும் 2021ம் ஆண்டு பொங்கல் பண்டிகையன்று மாஸ்டர் திரைப்படத்தை வெளியிடவும், அதே வருடம் தீபாவளிக்கு ‘தளபதி 65’ படத்தை வெளியிட வேண்டும் என்றும் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒரே ஆண்டில் இரண்டு படங்கள் வெளியாவது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால், இந்த வருடம் தியேட்டர்கள் திறந்தவுடன் வெளியாகும் முதல் படம் மாஸ்டர் என்று அனைவரும் காத்திருக்கும் நிலையில், விஜய்யின் முடிவு பல ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.