X

ஒரே ஆண்டில் அதிக வெற்றிகள் – ஆஸ்திரேலியாவின் சாதனையை முறியடித்தது இந்திய கிரிக்கெட் அணி

டி 20 உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியாவின் 19 ஆண்டு கால சாதனையை இந்திய அணி முறியடித்தது. அனைத்து வடிவிலான போட்டியிலும் சேர்த்து இந்திய அணி 39 வெற்றியைப் பெற்றுள்ளது.

டெஸ்டில் 2, ஒருநாள் ஆட்டத்தில் 13, டி20 போட்டியில் 24 என 39 வெற்றி கிடைத்துள்ளது. 2003-ம் ஆண்டு உலக கோப்பையை வென்றபோது ஆஸ்திரேலியா அந்த வருடத்தில் மொத்தம் 38 போட்டியில் வெற்றி பெற்று இருந்தது. ஒரு ஆண்டில் ஒரு அணி சர்வதேச போட்டியில் பெற்ற அதிக வெற்றியாக இது இருந்தது.

ஆஸ்திரேலியாவின் இந்த சாதனையை தற்போது இந்தியா முறியடித்து உள்ளது. கடந்த 11-ம் தேதி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்று இந்த சாதனையை சமன் செய்திருந்தது. டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானை வீழ்த்தியதன் மூலம் சாதனை முறியடிக்கப்பட்டது.