ஒரேமாதிரியான வி‌ஷங்களை பண்ணுவதில்லைனு உறுதியாக இருக்கேன் – விக்ரம் பிரபு

தினேஷ் செல்வராஜ் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியாகியுள்ள துப்பாக்கி முனை மிகப்பெரிய வரவேற்பு பெற்றிருக்கிறது.

இதனால் சந்தோஷத்தில் இருக்கும் விக்ரம் பிரபு, சமீபத்தில் நிருபர்களிடம் பேசுகையில், “இந்தப் படத்துக்காக 45 வயது போலீஸ் அதிகாரியா நடிக்கணும்னு இயக்குநர் தினேஷ் சொன்னபோது, கொஞ்சம் யோசித்தேன். பிறகு, சால்ட் அண்ட் பெப்பர் தோற்றத்தில்ல ஒரு போட்டோஷூட் பண்ணிமோம். அது பக்காவாக செட் ஆனது. ஏற்கெனவே போலீசாக `சிகரம் தொடு’ படத்துல நடிச்சிருக்கேன்.

அதுல இளமையான போலீஸ். இந்தப் படத்துல வயதான போலீஸ் அதிகாரி. 33 என்கவுன்டர் பண்ணின போலீஸ் எப்படி இருப்பார், அவரோட மனநிலை எப்படி இருக்கும்னு புரிஞ்சுக்கிட்டு நடித்தேன். அதுக்குப் பின்னாடி காவல் துறையைப் பற்றி பல ஆராய்ச்சிகள் இருக்கு. ஆரம்பத்துல சில தயக்கங்கள் இருந்தாலும், படத்தின் கதை அதை உடைச்சு என்னை பாசிட்டிவ் மனநிலைக்குக் கொண்டு வந்திருச்சு.

பொதுவா நடிகர்களுக்கு எல்லாப் படமும் ஹிட் ஆகாது. சில படங்கள்தான் மக்கள் மனசுல பதியும். அப்பாவுக்கு `சின்னத்தம்பி’, `அக்னி நட்சத்திரம்‘ படங்கள். அப்படி இருந்தது. எனக்கு, `கும்கி’ படம். அந்தப் படத்துக்குக் கிடைச்ச பெயரை தக்க வைத்துக்கொள்ள, வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்க ஆசைப்படுகிறேன். ஒரேமாதிரியான வி‌ஷங்களை திரும்பத் திரும்பப் பண்ணுவதில்லைனு உறுதியாக இருக்கேன். அதனால், வெற்றி தோல்வி ரெண்டுமே என் கேரியர்ல இருக்கு. காமெடி, ஆக்‌‌ஷன், ரொமான்ஸ்னு எல்லா வரையிலும் நடிக்க ஆசைப்படுறேன். பத்து வருடத்துக்கு முன்னாடி ஒரு படத்தை ரிலீஸ் பண்றது ஈசியா இருந்துச்சு. இப்போ எல்லாப் படங்களுக்கும் ஏதாவது ஒரு பிரச்னையை சமூகவலைதள ஆள்கள் கிளப்பி விடுறாங்க. இதனால நடிகர்களுக்கு நிறைய கஷ்டங்கள் இருக்கு.” என்றார்.

சினிமா துறையில அப்பா, தாத்தா எடுத்த பெயரை நீங்களும் எடுக்கணும்ங்கிற அழுத்தம் உங்களுக்கு இருக்கா?

யார் என்ன வேலை செய்கிறோமோ, அதுக்கான பலன் கட்டாயம் கிடைக்கும். நான் சினிமாவுல நல்லா நடிக்கிறதுக்கான அத்தனை முயற்சிகளையும் பண்ணிக்கிட்டு இருக்கேன். ஒரு கதையைத் தேர்ந்தெடுக்கிறதுக்கு முன்னாடி அந்தக் கதை படமாக வந்தால், நான் தியேட்டர்ல போய்ப் பார்ப்பேனானுதான் முதல்ல யோசிப்பேன். இப்படி நானும் நடிப்புல நிறைய மெனக்கெடுறேன். நேரமும் நமக்குக் கைகூடி வரணும்; வரும்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools